தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

* பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

* நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

* கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

* தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

* வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் குரு வராமல், வெயிலில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

* இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

* கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

முகம் பொலிவடைய வேண்டுமா?

1. ஒரு தேக்கரண்டி ஓட்ஸ், இரண்டு தேக்கரண்டி தக்காளிச்சாறு, இரண்டு தேக்கரண்டி கேரட் சாறு ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவி , அரை மணி நேரத்துக்கு பின் கழுவவும்.

2. தோல் நீக்கிய திராட்சையை முகத்தில் தடவி சிறிது நேரம் சென்ற பின்  கழுவுவதும் முகத்துக்கு பொலிவைத் தரும்.

3. முகத்திலுள்ள பருக்களை நீக்க ஒரு பல் பூண்டு அல்லது துண்டு கிராம்பை அரைத்து அதை விரல் நுனியில் தொட்டு பரு மீது வைத்தால்,அது அப்படியே அமுங்கிவிடும்.

4. முகத்தை அடிக்கடி ப்ளீச்சிங் செய்வது சரியானதல்ல. ஏனெனில் சிலவிதமான ப்ளீச்சிங்கில் அடங்கியுள்ள அமோனியா போன்ற ரசாயனப் பொருட்கள் முக சருமத்துக்கு கேடு விளைவிக்கக்கூடும். குறிப்பாக முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது ஒவ்வாமையை விளைவிக்கும். மேலும் ப்ளீச்சிங் அதிகமானால், முகத்தில் சுருக்கங்கள் ஏற்படவும் காரணமாகிறது.

5. அடிக்கடி முகத்தை கழுவுவதனால்,முகச் சருமத்தின் இயல்பு மாற்றமடையக்கூடும்.  குறிப்பாக சோப்பு உபயோகித்து இப்படிக் கழுவுவதால், சோப்புகளில் உள்ள காரத் தன்மை சருமத்தை வறட்சிக்குத் தள்ளிவிடும்.

6. எண்ணெய் மயமான சருமம் உடையவர்கள் முகம் கழுவும்போது பச்சைப் பயறு மாவு உபயோகிப்பது நல்லது. இரவு உறங்கச் செல்லும் முன்னர் முகத்தை சுத்தமாகக் கழுவுவது நல்லது. எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தில், முகப் பருக்கள் ஏற்பட சாத்தியம் அதிகம். தினமும் அல்லது அடிக்கடி முருங்கைக்கீரை உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும்.  பொரித்த மற்றும் வறுவல் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கட்டாயமாக முகம் கழுவ சோப்பை உபயோகிக்கக்கூடாது. பயத்தமாவு அலல்து கடலைமாவு உபயோகித்து முகம் கழுவவேண்டும்.

7. நமது தோற்றத்துக்கு முதிர்ச்சி ஏறாமல் தவிர்த்து  நம்மைப் பாதுகாப்பது ஆன்டி ஆக்ஸிடென்டுகளாகும். மிகவும் முன்னதாகவே ஏற்படும் முதிர்ச்சி, முகத்தின் சுருக்கங்கள் ஆகியவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த ஓர் அளவுக்கு இந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகளால்தான் இயலும்.  ஆப்பிள், ஆரஞ்சு, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், வெங்காயம், தக்காளி கேரட், பூசணி மற்றும் கீரைவகைகள் ஆகியவற்றிலும் இவை அதிகம் காணப்படுகிறது. இவைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது சிறப்பானது.  பத்து அல்லது பன்னிரண்டு டம்ளர் தண்ணீர் தினமும் அருந்த வேண்டும். சருமத்தின் பளபளப்புக்கு தண்ணீர் மிக அவசியமானது.

8. சிலருக்கு சருமம் வறட்சியாக இருக்கும்.  சோப்புகளை அடிக்கடி மாற்றுவது சருமத்தின் வளர்ச்சியைக் கூட்டக்கூடும். இவர்கள் அரிசிமாவு, பால், கஸ்தூரி மஞ்சள் போன்றவற்றை கலந்துமுகத்தில் பூசிக் கொள்வதால், வறட்சியைத் தடுக்கலாம். குளித்து முடித்ததும் ஒரு மாய்ச்சரைஸர் உபயோகித்து உடல் முழுவதும்  மசாஜ் செய்வதும் வறண்ட சருமத்துக்கு நல்லது.

பளிச்’ முகத்திற்கு முத்தான சில யோசனைகள்

வெயில் காலங்களில் சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். இந்த கருப்பு முகத்தை களையாக மாற்ற வீட்டிலேயே இருக்கு கண்கண்ட அழகு சாதன பொருட்கள். அவற்றை உபயோகித்துப் பாருங்களேன் கருப்பு மறைந்து முகம் களையாக மாறும்.

“அழகு தரும் தேங்காய்”

 அன்றாட சமையலில் முக்கிய இடம்பெறுவது தேங்காய், இதில் உள்ள எண்ணெய் சத்து நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்­ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும். இளநீரில் உள்ள வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூட அவை காணாமல் போய்விடும்.

“பாசிப்பருப்பு ப்ளீச்”

முகத்தில் சிலருக்கு ஆங்காங்கே கருப்பு தீவுகள் போல் “திட்டுகள்” தோன்றும். இதற்கு பாசிப்பருப்பு சிறந்த ப்ளீச் போல செயல்படுகிறது. பாசிப் பருப்பு, கசகசா, பாதாம், பிஸ்தா, துளசி, ரோஜா மொட்டு இவற்றை நன்றாக காயவைத்து பவுடர் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை சிறிது எடுத்து, தினமும் பாலுடன் சேர்த்து குழைத்து, முகத்தில் பூசுங்கள். 15 நிமிடத்துக்கு பிறகு கழுவினால் முகத்தின் கருந்திட்டுக்கள் காணமல் போகும்.

“பழக்கூழ் பேஷியல்”

ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, கலக்கி பஞ்சில் முக்கி முகத்தில் பூசவேண்டும். இதனால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும். கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்,1 உலர்ந்த திராட்சை பழம் இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்து இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளவும். இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், இந்த பேஷியல் மாற்றி விடும்.

“பிசுபிசுப்பு நீங்க”

முகத்தில் அதிக எண்ணெய் பசை இருந்தாலே முகம் கருமை அடையும். தலையில் பிசுபிசுப்பை நீக்க ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும். ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும். அப்புறம் பாருங்கள் முகம் ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல பளிச் தான்.

இயற்கை மருத்துவம் சொல்லும் ஆரோக்கிய குறிப்புக்கள் இவை..

1) என்றும் 16 வயது வாழ ஓர்  நெல்லிக்கனி.

2) இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ.

3) மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை.

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளிகீரை.

7) உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.

8) மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம்.

9) ரத்தத்தை சுத்தமாகும் “”அருகம்புல்.””

10) கான்சர் நோயை குணமாக்கும் “” சீதா பழம்.””

11) மூளை வலிமைக்கு ஓர் “”பப்பாளி பழம்.””

12) நீரிழிவு நோயை குணமாக்கும் “” முள்ளங்கி.””

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட “”வெந்தயக் கீரை.””

14) நீரிழிவு நோயை குணமாக்க “” வில்வம்.””

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் “”துளசி.””

16) மார்பு சளி நீங்கும் “”சுண்டைக்காய்.””

17) சளி, ஆஸ்துமாவுக்கு “”ஆடாதொடை.””

18) ஞாபகசக்தியை கொடுக்கும் “”வல்லாரை கீரை.””

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்””பசலைக்கீரை.””

20) ரத்த சோகையை நீக்கும் “” பீட்ரூட்.””

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்”” அன்னாசி பழம்.””

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும் “”தூதுவளை””

25) முகம் அழகுபெற “”திராட்சை பழம்.””

26) அஜீரணத்தை போக்கும் “” புதினா.””

Leave a Reply

Your email address will not be published.