கர்ப்பகாலத்தில் பெண்கள் பாலில் குங்குமப்பூ கலக்கி குடித்தால் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்று பலர் கூறி நாம் கேட்டிருப்போம். ஆனால் சிலர் இது முற்றிலும் பொய் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பெண்கள் கர்ப்பமாக இருக்கும் தருணம் மிகவும் அழகானது. இந்த சமயத்தில் பெண்கள் ஆரோக்கியமாகவும், மனரீதியாகவும் சந்தோஷமாக இருத்தல் அவசியமானது. கர்ப்ப காலம் முழுவதும் இந்த குங்குமப்பூவை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சரி வாங்க மேலும் இதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை குறித்து பார்க்கலாம்..

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு எரிச்சலாக இருப்பது மனநிலை மாற்றம். ஒரு சமயம் அழுவது போல் இருக்கும். அடுத்த நொடியே சிரிக்க வேண்டும் என்று தோன்றும். இது போல நொடிக்கு நொடி மாறுவது மனஅழுத்தத்திற்கு கொண்டு செல்லும். இந்த வேளையில் குங்குமப்பூ மசாலா உதவியாக இருக்கும்.

இந்த நேரத்தில் இரத்த ஓட்டம் பொதுவாக அதிகரிப்பதால் கர்ப்பம் இரத்த அழுத்த அளவை பாதிக்கிறது. குங்குமப்பூ சிறிய அளவுகளில் எடுத்துக் கொள்ளும்போது உங்கள் இரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறைக்கிறது.

கர்ப்பகாலத்தில் பெண்களின் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது. குங்குமப்பூ கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. இது உங்களுடைய மற்றும் உங்கள் குழந்தையின் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

கர்ப்பமாக இருக்கும்போது ஒவ்வாமை மற்றும் நோய்த்தொற்றுகள் ஏற்படும். குங்குமப்பூ அனைத்து பருவகால ஒவ்வாமை, மூச்சு விடுவதில் சிரமம், மார்பு நெரிசல் மற்றும் பலவற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது.

சரியான அளவில் எடுத்துக்கொள்ளும் வரை எந்த பக்க விளைவுகளும் இல்லை. எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published.